Thursday, October 27, 2011

நிலை மாற்றம்...



நான் நினைத்துப்
பார்க்கிறேன் அந்த
புன்னகை சுமந்த முகங்களை...

நிறம் மாறியதாய்
நிலை மாறியதாய்
இப்போது பொய் முகங்களாய்...

அன்று நிலவு
பிரகாசித்த முகங்களெல்லாம்
இன்று இருட்டு பூசி்யுள்ளது...

இப்போதெல்லாம் அந்த
புன்னகைகளை நினைத்து
மட்டும் பார்க்க முடிகிறது...

எதிரில் நின்றாலும்
எங்கோ பார்த்தபடி
அறிமுகம் இல்லாதவராய் நான்...

கூப்பிட்டு பார்த்தேன்
பலமுறைக்கு பின்
வேண்டா வெறுப்பாய் திரும்பினார்கள்...

ஒற்றை ஆயத்த
புன்னகையை ஆயிரம்
கசப்பிற்கு பி்ன் மறைத்தி்ருந்தார்கள்...

அவர்கள் பேசிய
வார்த்தைகள் உயிரற்ற
செயற்கை தனத்தை வெளிச்சமிட்டது...

அவர்கள் சென்று
பலமணி நேரமாகியும்
நெருஞ்சி முள்ளொன்று குத்துகிறது...

இதயத்தில் அவர்கள்
நினைவுகளை கீறி
ரத்தம் சொட்ட வைக்கிறது...

காலமாற்றமா மனமாற்றமா
யோசித்து யோசித்தே
குழம்பிய குட்டையாகிறது மனம்...

இனிப்பை சுவைத்து
கசப்பை துப்பும்
இலையுதிர் காலம் இதுவென...

மெல்ல புரிகிறது
ஆயினும் ஆழ்மனம்
அந்த வலியை மறைக்கிறது...

அதோ அந்த
நிறம்மாறிய முகங்கள்
வலிய கூப்பிட்டு பார்க்கிறேன்...

வழக்கம் போல
கேட்காதது போலவும்
யாரென தெரியாதவராயும் அவர்கள்...

No comments:

Post a Comment