பரண் மேல் உறங்கியதை
தூசி தட்டி பார்த்தேன்..
ஓர் கதை கூறும்
கண்ணாடி கண் முன்
வந்தது..
ஒற்றை கதை படித்து
முடிப்பதற்குள் தொடர்ந்திடும்
அடுத்த கதை..
கதைக்குள் கதை புதைந்து
கதை குவியலாய்
மாறிடும்..
கண்கள் விரிய முகம்
மின்னலிட இதயம்
இலவம் பஞ்சாய்
மிதக்கும்...
ஏக்கப் பெருமூச்சுடன்
கண்ணீர் சொ்ட்டும்
கடந்த காலம் எண்ணி...
ஊசி போட்ட இடம்
வலி தெரியாமல்
இருக்க கொடுக்கும்
ஒத்தடமாய்...
என் வீட்டு பரணில்
நான் ஒளித்து வைத்த
இறந்த கால சுவடுகள்...
ஓரங்கள் நசுங்கி ஆங்காங்கே
செல்லரி்த்த நிலையில்
நான் பாதுகாக்கும் புகைப்படங்கள்..

No comments:
Post a Comment