Monday, October 10, 2011

தேய்பிறை....




தேய்பிறை என்று
தேம்பி அழுகின்ற
கருப்பு நிலவு...


இரு பக்கம் காட்டும்
நாணயம் போல 
தேய்பிறையில் உண்மை...


ஆளுக்காள் புகழ்வார்கள்
அதனாயுள் அற்பமே
தேய்பிறையின் போது...


தேய்பிறையாயினும் தோன்றும்
கண்ணில் தெரிந்தாலும்
கண்டுக்கொள்ளப்படாது நிலவு...


யதார்த்தம் உறைக்கும்
பெளர்ணமி நிரந்தரமல்ல
தேய்பிறையில் புரியும்...


நிலாச்சோறு மறந்து
குமிழ் விளக்கு
வெளிச்சத்தில் மெய்மறந்து...


ஆளாளுக்கு அவரவர்
விருப்ப விளக்குகளை
நிலவுக்கு மாற்றாக்கி..


பூமிக்கும் நிலவுக்குமான
உறவில் விரிசல்
தேய்பிறையின் போது...


விரிசல் அல்லவது
உண்மை காட்டும்
உலக கண்ணாடியது...


தேய்கிறது நிலவு
தேயட்டும் அது
தேய்வது இயற்கை...


தேய்பிறையில் தேடிவரும்
விலை மதிப்பில்லா
வாழ்க்கை பாடங்கள்...

1 comment:

  1. தேய்பிறையும் தருகிறது வளமான வாழ்க்கைப் பாடம். வளமான சிந்தனை.வாழ்த்துக்கள் ஜான்.தொடர்ந்து உங்கள் படைப்புகளைத் தந்திடுங்கள்.

    ReplyDelete