பிரிவதற்கு காரணங்களை அடுக்கி
வைக்கிறாய் நீ..
சேர்வதற்கு ஏதாவது ஒரு
காரணம் இருக்குமென
காத்திருக்கிறேன்...
உன்னை காயப்படுத்தாதிருக்க
பொங்கி வழிந்த நேசத்தை
ஒளித்து வைக்க துணிந்தேன்...
எங்கு வைத்தாலும் காட்டாறு
வெள்ளமாய் வடிந்து வெளிக்காட்டி
விடுகிறது...
இறுதியில் கவிதைகளில் பதுக்கி
வைத்து இரவுகளில் திறந்து வைக்க
கற்றுக் கொண்டேன்..

No comments:
Post a Comment