Thursday, September 15, 2011

பிரிவு......

விரலை விட்டு
நகக்கண்கள் விலக
நினைத்தால் குருதி
கொஞ்சம் சிந்தத் தான்
வேண்டும்...
விழியை விட்டு இமை
விலக நினைத்து
விழிகளை கொஞ்சம்
கசக்கத் தான் வேண்டும்...
இணைந்ததை பிரிப்பது
எளிதல்ல...
இணைவு உயிர் கலந்தது
பிரிவு உயிர் குடிப்பது...
பிரியத்தான் வேண்டும் என்றால்
சிறிது உயிரை சிந்தத் தான்
வேண்டும்...
வலியில்லாத வாழ்க்கை
இல்லை- உண்மை உறைக்கும்
ஒவ்வோர் பிரிவும்.. 

No comments:

Post a Comment