Thursday, September 15, 2011

தேக்கி வைக்காதீர்..

இன்றைக்கு தேக்கி 
வைத்த வார்த்தைகள்
எல்லாம் தீர்ந்தும் 
போயும் இருக்கலாம்...
எதையோ சொல்ல வந்து 
ஏன் சொல்ல
வேண்டுமென திரும்பியும் 
போய் இருக்கலாம்....
என்னிடம் சொல்வதற்கு 
ஒன்றும் இல்லாமலும் 
போய் இருக்கலாம்...
ஒற்றை கேள்வியொன்றை 
உளறி கொட்டி போகிறேன்...
நாளைக்கு என்று வார்த்தைகளை
இன்று சேமித்து 
வைக்க முடியுமா 
உங்களால்???
நாளை என்று 
ஒரு நாளே
இல்லாமல் போனால்.
சேர்த்து வைத்த வார்தைகளை
என்ன செய்வீர்கள்.. 

No comments:

Post a Comment