பரமபத விளையாட்டை
தெரியாத் தனமாய்
விளையாட போனேன்...
உறவுகள் சொல்லி
நட்பு சொல்லி ஏணிகள்
ஏற்றி வைத்தன..
கட்டங்கள் தாண்டினேன்
வேதனை சிந்தாமல்...
கட்டங்கள் மேலே
மேலே போக போக
மொட்டையடிக்கப்பட்ட
மரம் போல
ஒவ்வொரு கிளையும்
உதிர்ந்து
நான் மட்டும்
தனித்து விடப்பட்டேன்...
கொத்த காத்திருக்கும்
பாம்புகள்...
கை கொடுப்பார்
யாராவது உள்ளனரா
என எட்டிப்பார்த்தேன்...
நான் பார்ப்பதை
தெரிந்ததும்
தேள் கொட்டியதும்
காலை வெடுக்கென
எடுப்பது போல
முகத்தை கணப்
பொழுதினில்
திருப்பிட கண்டேன்...
தெரியாத் தனமாய்
விளையாட போனேன்...
உறவுகள் சொல்லி
நட்பு சொல்லி ஏணிகள்
ஏற்றி வைத்தன..
கட்டங்கள் தாண்டினேன்
வேதனை சிந்தாமல்...
கட்டங்கள் மேலே
மேலே போக போக
மொட்டையடிக்கப்பட்ட
மரம் போல
ஒவ்வொரு கிளையும்
உதிர்ந்து
நான் மட்டும்
தனித்து விடப்பட்டேன்...
கொத்த காத்திருக்கும்
பாம்புகள்...
கை கொடுப்பார்
யாராவது உள்ளனரா
என எட்டிப்பார்த்தேன்...
நான் பார்ப்பதை
தெரிந்ததும்
தேள் கொட்டியதும்
காலை வெடுக்கென
எடுப்பது போல
முகத்தை கணப்
பொழுதினில்
திருப்பிட கண்டேன்...

No comments:
Post a Comment