Thursday, September 15, 2011

வழி போக்கர்கள்...

வருபவர்கள் எல்லாமே 
வழி போக்கர்களாய்...
வழியில் பேசி 
வழியிலேயே போகிறார்கள்...
வார்த்தைகளை பரிசாய் 
கொடுப்பவர்களுக்கு
இதயத்தை பரிசை கொடுத்து 
உடைந்து போகிறேன்...
யாரோ வைத்த 
விருந்துக்கு வந்து
விருந்து முடிந்து ஓடும்
அவசர உலகம்!!!!
இடைப்பட்ட கணங்களில்
சில ஆயத்த புன்னகை...
காகித பூக்களை பரிசாய் 
எனக்கு தந்து...
நொண்டி குதிரைகளை 
நம்பி நெடுந்தூர பயணம்
பாதி வழி கடப்பதற்குள் 
தனித்து நான்...

No comments:

Post a Comment