ஐயனும் ஆத்தாளும்
ஆசை ஆசையா வளர்த்தாங்க
வளத்தியான ஆட்டுகிடா....
அய்யனார்
கோவில் திருவிழாவுக்கு
பலியானது - நேர்ந்துகிட்டாங்கலாம்...
ஐயனும் ஆத்தாளும்
பொத்தி பொத்தி
வளர்த்தாங்க சேவலொன்னை..
பொசுக்கென ஒரு நாள்
முனீஸ்வரனுக்கு
வெட்டப்பட்டது- நேர்ந்துகிட்டாங்கலாம்...
கண்ணே மணியே முத்தே
என சீராட்டி என்னையும்
தான் வளர்த்தாங்க...
கல்யாணம் செய்றோம்னு
குடிகார மனுஷனுக்கு
கட்டி வெச்சாங்க- நேர்ந்துகிட்டாங்களோ....

No comments:
Post a Comment