அடிக்கடி வந்து போகிறது
ஞாபக மின்னல்கள்..
அக்கணம் நிகழ்கால
கிளையிலிருந்து இறந்தகால
கிளைக்கு தாவுகிறது
மனக்குரங்கு..
எழுதிய பக்கங்கள்
ஒருமுறை
வாசிக்கப்படுகிறது..
மனதினுள் மேகம் கருத்து
இமை வானில் இருந்து
மழைத் தூரல்கள் பொழிந்து
இதயம் நனைகிறது..
வெட்ட வெட்ட முளைக்கும்
நகம் போல என்
இறந்த காலம் அடிக்கடி
தோன்றி மறைகிறது...
ஒவ்வோர் முறையும்
என் நிகழ்காலத்தில்
இடியும் மின்னலும் மழையும்
பொழிந்து பின்பு
மயான அமைதியை
தருகிறது...
ஞாபக மின்னல்கள்..
அக்கணம் நிகழ்கால
கிளையிலிருந்து இறந்தகால
கிளைக்கு தாவுகிறது
மனக்குரங்கு..
எழுதிய பக்கங்கள்
ஒருமுறை
வாசிக்கப்படுகிறது..
மனதினுள் மேகம் கருத்து
இமை வானில் இருந்து
மழைத் தூரல்கள் பொழிந்து
இதயம் நனைகிறது..
வெட்ட வெட்ட முளைக்கும்
நகம் போல என்
இறந்த காலம் அடிக்கடி
தோன்றி மறைகிறது...
ஒவ்வோர் முறையும்
என் நிகழ்காலத்தில்
இடியும் மின்னலும் மழையும்
பொழிந்து பின்பு
மயான அமைதியை
தருகிறது...

No comments:
Post a Comment