நதிக்கரையோரங்கள்
அனாதை கால் தடங்கள்
முகவரிகளை
தேடினேன்...
ஒற்றை முகவரி
கிடைத்தது
கால் தடம்
வழியே சென்றேன்..
முன்னோக்கி சென்றால்
நிகழ் காலம்
முகம் தொலைத்துள்ளது...
இறந்தகாலம்
முகம் காட்டி
சிரித்தது..
அங்கே
இறந்தகால முகத்திற்கும்
நிகழ்கால முகத்திற்கும்
வித்யாசங்கள்...
ஒரே முகம்
இப்படியா
கால மாற்றத்தால்
அடையாளம் இழப்பது...
வித்யாசங்கள் படித்தேன்
இறந்தகாலம் படிக்கையில்
கண்ணீர் வடிகிறது...
நிகழ்காலம் தொலைத்தவைகளின்
நீளமான பட்டியல்களை
முன் நீட்டுகிறது...
இறந்த கால
இனிப்பை உதட்டில்
ஒற்றி எடுக்கையில்...
நிகழ்கால கண்ணீர்
கன்னம் வழிந்தோடி
உதட்டில் பட
கண் திறந்து
நதிக்கரை ஓரம் முன்னோக்கி
நடக்கிறேன்...
அனாதை கால் தடங்கள்
முகவரிகளை
தேடினேன்...
ஒற்றை முகவரி
கிடைத்தது
கால் தடம்
வழியே சென்றேன்..
முன்னோக்கி சென்றால்
நிகழ் காலம்
முகம் தொலைத்துள்ளது...
இறந்தகாலம்
முகம் காட்டி
சிரித்தது..
அங்கே
இறந்தகால முகத்திற்கும்
நிகழ்கால முகத்திற்கும்
வித்யாசங்கள்...
ஒரே முகம்
இப்படியா
கால மாற்றத்தால்
அடையாளம் இழப்பது...
வித்யாசங்கள் படித்தேன்
இறந்தகாலம் படிக்கையில்
கண்ணீர் வடிகிறது...
நிகழ்காலம் தொலைத்தவைகளின்
நீளமான பட்டியல்களை
முன் நீட்டுகிறது...
இறந்த கால
இனிப்பை உதட்டில்
ஒற்றி எடுக்கையில்...
நிகழ்கால கண்ணீர்
கன்னம் வழிந்தோடி
உதட்டில் பட
கண் திறந்து
நதிக்கரை ஓரம் முன்னோக்கி
நடக்கிறேன்...

No comments:
Post a Comment