உதிர்காலம்....
பொய்முகம் காட்டும்
கண்ணாடிகளில்
மெய்முகம் தேடி
களைத்தேன்..
அவர்கள் கைகளில்
தேடினேன்...
என்னுடன் கைகுலுக்கிய
கைரேகைகளை சுரண்டி
மறைத்துள்ளார்கள்..
அவர்கள் தோட்டத்தில்
நான் நட்ட
செடிகள் பிடுங்கப்பட்டு
வேறு செடிகள்
நடப்பட்டு உள்ளன...
இது தான்
இலையுதிர்காலம் போல
இதயம் உதிரும் காலமா???
No comments:
Post a Comment