எனக்கு பொருத்தமாய்...
யாரோ வருகிறார்கள்
யாரோ போகிறார்கள்
மரங்களுக்கு தெரிவதில்லை
மனித முகம்....
ஒவ்வோர் நாளும்
தவறாமல் கடிதம்
போடும் உண்மை...
நீ பாவம்
அனாதை குழந்தையென...
கனவுக்காய் உறக்கம்
உயிரை உலர்த்திக் கொள்ள...
வேதனை அழுக்கு துணிகளை
சுமக்கும் கழுதை மனம்..
மெளன தாழ்ப்பாளில்
என்னை பூட்டி
மொட்டையடிக்கப்பட்ட
மரமாய் நான்...
கரைந்து கொண்டிருக்கிறது
ஓர் நிலா!!!
விடியலுக்குள் தன்னை
சமாதி செய்ய....

No comments:
Post a Comment