Thursday, September 15, 2011

பச்சோந்தி முகங்கள்...

நான் தேடிக் கொண்டே
இருந்தேன்...
எப்பக்கம் திரும்பினாலும்
பச்சோந்தி முகங்கள்...
முகவரி தெரியாத கடிதம்
போல ஊர் சுற்றும்
குழப்பங்கள்...
கருத்த மேகம் போல
இருட்டு மனங்கள்..
முகமூடிகளை கழற்றுங்கள்
உரக்க கத்தினேன்..
செவிடர்களாய்
நடிப்பு...
மரம் நடு விழா
நடத்தியவர்களின்
கரங்களில் கோடாரிகள்...
நீங்கள் நட்ட மரம்
வெட்டாதீர்கள்
இமை தூரல் சிந்தினன்...
இதயத்தின் ஆழம் நோக்கி
கோடாரிகள் இறங்கின...
வறண்ட நிலங்கள்
தெரியாமல்
விதைத்தேனோ...
மொட்டையடிக்கும் எதிர்பார்ப்புகள்
இலையுதிர் கால மரமாய்
நாட்கள்... 

No comments:

Post a Comment