Thursday, September 15, 2011

ஊர் சுற்றி...

எதையோ நினைத்து மனம்
ஊர்சுற்றுகிறது...
ஆழ்ந்த உறக்கத்திலும்
ஆழ் மனம் எதையோ தேடுகிறது...
சலனமில்லா பொழுதுகளிலும்
சிலந்தி வலை பின்னும்...
இரவுக்கும் பகலுக்கும் இடையே
நீண்ட பொழுதுகள்
வெறுப்பை துப்பி சலிப்பை
கக்குகிறது..
நாட்காட்டி கூட தினமும்
கிழிக்கிறாய் என்னை- நீ
என்ன கிழித்தாய் என
கேலி பேசுகிறது...
இலையுதிர் காலமான நொடிகள்
கரைந்து போகிறதை
தடுக்க இயலாத கோழைத்தனம்...
நமபிக்கை வேர்கள் முளைக்கும்
தருணம் சோம்பல் களையாய்...
உறக்கம் போதும்
விழி எழு 
வினை செய்...
காலம் உனக்காய் காத்திருக்காது
ஓடிக்கொண்டே இரு காலத்தோடு... 

No comments:

Post a Comment