Thursday, September 15, 2011

அடித்து துவையுங்கள்...

புறக்கணிக்கப்படுதலும் மறக்கடிக்கப்படுதலும்
இடியும் மின்னலுமாய் 
ஒன்றாய் வரத்தான் செய்கிறது...
உச்சம் யாருக்கும் 
சொந்தமில்லை என்ற
உண்மை போதிக்கும் கொடிமரங்கள்...
உறவுகளை நகங்களாய் 
கருதி வெட்டி விடத்
துடிக்கும் வேதனை காளான்கள்...
இருட்டும் வெளிச்சமும்
நாளுக்கு மட்டுமல்ல
நமக்கும் சொந்தமானது தான்...
மிதித்து மிதித்து 
கூழாய் போன களிமண்
தானே உருபெரும் முழுமையாய்...
அடித்து துவைத்த 
துணியில் தானே
அழுக்குகள் விட்டொழியும்...
குத்துங்கள் அடியுங்கள் 
மிதியுங்கள் இவைகளுக்காய் 
கரைந்து போகாது நிலா??? 

No comments:

Post a Comment