Thursday, September 15, 2011

துவக்கப்புள்ளி.....

துக்கத்தின் துவக்கப்புள்ளி எது?
காரணம் தெரியாமல் களைத்து
போனது முடிவுப்புள்ளி.... 
வடித்த கண்ணீரின் வடு கூட
தெரியாமல் வறண்டு
சிரிக்கும் நிலம்... 
அடுத்த கண்ணீரை வரவேற்க
வழி நோக்கி 
பார்த்திருக்கும் விழிகள்... 
எத்தனை சோகத்தை ஒளித்து
வைத்துள்ளதோ வானம்...
புரியாத மெளனத்தை
சுமந்தபடி... 
இயற்கையின் விளையாட்டில் அடிக்கடி
அரங்கேறும் நாடகங்கள் நிஜத்தின்
பக்கங்களில் ஜீரணிக்கப்பட்டு... 
காலத்தின் சுழலில் காணாமல்
போன கண்ணீரின் வலியை
யார் அறிவார்??? 
விடை தெரியா நிலையில்
துவக்கப்புள்ளி வைத்தது
ஒரு முடிவுப் புள்ளி.. 

No comments:

Post a Comment