Monday, September 12, 2011

வாசிப்பு!!

வாசித்த பக்கங்களை
புரட்டிப் பார்த்தேன்..
ஒட்டி இருந்த வாசத்தை
உணர்ந்து கசிந்தேன்..
இறந்த காலம் 
இறப்பில்லாதது...
நினைவு திரையரங்கில் 
நிறுத்தப்படாத படமாய் ஓடும்...
அடிக்கடி வாசிக்கும்
கவிதையாய் இறந்தகாலம்...
ஒவ்வொரு வாசிப்பின் 
முடிவிலும் சில துளி
கண்ணீர் கைதட்டலாய்... 

No comments:

Post a Comment