Thursday, September 15, 2011

அறுந்த உறவில்..

மேகம் வெடித்து 
பொழிந்த மழை
நிலமதை நனைக்கும் முன்
மறைந்து போனது...
தூரத்தில் குயிலோசை
சுக ராகம் என
அருகில் போனால்
சோகராகம் இசைத்தது...
என்னை நோக்கி வருகிறதோ 
நிழலென நினைத்து
அருகில் போனால் எதிர்திசை
மாறி போனது...
பெளர்ணமி பூக்கும் 
நிலவென நினைக்கையில் 
அமாவாசையாய் காட்சி
அளித்தது...
நிஜத்தில் வந்த 
உருவம் கனவாய் 
கரைநது போனது..
குறை பிரசவ 
குழந்தையாய்
பிறந்த குழந்தை...
வளி காற்றை 
பார்க்கும் முன்பே
உயிர் காற்றை 
பிரிந்து சென்றது..
வலி சுமந்த இதயம்
சொல்லும ஆறுதல்...
ஓர் நாள் வாழ்க்கையிலேயே 
கரைபுரண்டோடும்
ஆனந்த வெள்ளமிது..
காலம் முழுக்க 
ஒத்தி எடுக்கும்
நினைவு பெட்டகமிது.. 

No comments:

Post a Comment