Saturday, September 17, 2011

பிரியாத வரம்..


விழி முன்னே
வாழ்க்கை புன்னகைத்து
வெளிச்சமிடுகிறது..
விழுந்து விட்ட 
எதிர்காலமோ நிமிர்ந்து
நிற்கிறது...
தொலைந்து போன
இன்பத்தின் அடையாளம்
தூரத்தில் தெரிகிறது...
இதயத்தில் ஏனோ
இன்ப பூ மனம் வீச
பூக்கின்றது...
அலையாடும் கடல் போல
ஆழ்மனதும் இன்னிசை
இசைக்கின்றது...
ஒரு கணமும் விலகாத
உறவெண்ணி மனமும்
களிக்கின்றது...
இரு மனங்கள் ஓர்
கணத்தில் இரண்டற கலந்து
ஒன்றாகிறது...
இரு நிலாக்கள் 
ஒன்றாகி பெளர்ணமி
பூக்கின்றது...
அதோ அங்கோ
மெளனத்தில் சம்மதம்
பிறக்கின்றது...
பிரியாத வரம் பெற்று
கரம் பிடிக்க கையும்
நீள்கின்றது...

No comments:

Post a Comment