அழகாக
கவிதை செய்து
முதல் பரிசு
பெற வேண்டி
அடக்க முடியாத
பேராவலில்
தருமியாய் நானும்
மாறிட...
என் ஆசை
உணர்ந்தோ என்னவோ
மாறு வேடமணிந்த
சிவபெருமானாய்
நீயும் என் முன்
வர துவங்கியது
கேள்வி யுத்தம்...
வழக்கம் போல
வரிசைகளாய்
கேள்விகளை
நான் கேட்க
உன் நிலவு முகமும்
வில் இமைகளும்
மலர்ந்த புன்னகையும்
பதிலானது...
அதுவே நான்
எழுதிட கருவுமாகி
கவிதையுமாகி
நக்கீரனும் பொருள்
குற்றம் தேட இயலாத
நீ தந்த கவிதையை
எடுத்துக் கொண்டு
ஓடினேன்...

No comments:
Post a Comment