Thursday, September 15, 2011

நலமா நண்பனே?

நலமா நண்பனே?
மிக்க நலம் பொய்யை நம்பிடு...
உறவுகள் சுகமா?
அனைவரும் சுகமே 
உறவுகளுக்கு நான் உறவாக
இல்லை என்ற போதிலும்...
என்ன ஆயிற்று உனக்கு?
பழக பழக பாலும்
புளித்த கதையாகி விட்டது...
எங்கே உன் சிரி்ப்பு?
இறந்த காலத்தில் ஒட்டியிருக்கும்
போய் பார்த்துக்கொள்...
எங்கே உன் உறவுகள்?
என் இதயத்தின் மென்மை
பக்கத்தில் விளையாடுகிறார்கள்..
பின் ஏனிந்த விழிநீர்?
மலரெரிந்த உறவுகள் இப்போது
வாளெரிந்து விளையாடுகிறார்கள்..
முன் போல கவி்தை எழுதுகிறாயா?
எழுதுகிறேன் கண்ணீரில்...
உண்மையில் என்ன நடந்தது?
அமிர்தம் அளவிற்கு மிஞ்சிவிட்டது..
இப்போது என்ன செய்கிறார்?
உலக அதிசயமாய் இறந்தவன்
கவிதை எழுதுகிறேன்...
உலக கோப்பை கிரிக்கெட்டில் 
இந்தியா வென்றதை பார்த்தாயா?
இறந்தகாலத்திற்கும் நிகழ்காலத்திற்கும்
இடையை ரன்கள் எடுத்தே 
ரணமாகி போன எனக்கு
கிரி்க்கெட் பார்க்க நேரமில்லை...
ஏர்டெல் சூப்பர் சிங்கர் ரசிக்கிறாயா?
நிலா தேய்கிறதை ரசிக்கிறேன்..
உனக்காக இறைவனிடம் 
வேண்டுகிறேன்!!!
நன்றாக வேண்டு
அவரை சீக்கிரம் பார்க்க
நான் ஆசைப்படுவது நிறைவேற
வேண்டுமென வேண்டு... 

No comments:

Post a Comment