Monday, September 12, 2011

எரிப்பதா புதைப்பதா???

எரிப்பதா புதைப்பதா
எனக்குள் ஓர் குழப்பம்...
எரித்து விட்டாலும் 
சாம்பல் மிஞ்சும்...
புதைத்து விட்டாலும்
புல் முளைக்கும்...
மிஞ்சவும் கூடாது 
முளைக்கவும் கூடாது..
மிஞ்சியது கூட 
விஷமாகும்...
முளைத்தது கூட 
முள்ளாகும்...
எரிப்பதா புதைப்பதா 
எனக்குள் ஓர் குழப்பம்...
எரித்து விட்டால் 
எல்லாம் வேகுமா?
புதைத்து விட்டால் 
எல்லாம் மண்ணாகுமா?
வேகவும் வேண்டும் 
மண்ணாகவும் வேண்டும்...
வேகாதது கூட 
வேதனையளிக்கும்...
மண்ணாகதது கூட மனம் 
கதற வைக்கும்...
எரிப்பதா புதைப்பதா 
எனக்குள் ஓர் குழப்பம்...
எரித்த பிறகு மீண்டும் 
புதைக்க முடியுமா?
புதைத்த பிறகு மீண்டும் 
எரிக்க முடியுமா?
எரிப்பதா புதைப்பதா 
எனக்குள் ஓர் குழப்பம்...
எரித்தாலும் புதைத்தாலும் 
மீண்டும் மீண்டும் எழுகிறது... 
ஆழ் இதயம் கீறிய
கசப்பு நிமிடங்கள்... 

No comments:

Post a Comment