பொருத்தமான
புன்னகை முகமூடிஎனக்கு நானே
அணிந்தபடி..
யாரோ வருகிறார்கள்
யாரோ போகிறார்கள்
யாருடனோ யாரோ
பேசுகிறார்கள்..
எந்த மரத்திற்கும்
தெரிவதில்லை
மனிதர்களின் முகங்கள்...
மூன்று வேளையும்
உணவு
அழுத்தும் வேதனை பிசைந்து...
தாகத்திற்கு தண்ணீர்
கண்ணீர் துளிகள் சேர்த்து..
ஒவ்வோர் நாளும்
கடிதம் போடுகிறது
நீ அனாதை குழந்தையென...
கனவுக்காய் உறக்கம்
உயிரை உலர்த்திக் கொள்ள...
வேதனை அழுக்கு துணிகள்
சுமக்கும் கழுதை மனம்..
வண்ணானின்றி
ஊர் ஊராய் சுற்றி..
இருட்டோடு பேசும்
வித்தை கற்ற நான்...
இறந்தகால சுள்ளிகள்
எரித்து தனிமை
குளிரை எதிர்த்து போராடி...
மெளன தாழ்பாள் போட்ட
ஊமை நாவால்
எனது உரையாடல்கள்..
எதையோ நினைத்து
தானாய் சிரித்து
எதற்கோ அழும்
பைத்திய நாயாய் ஆழ்மனம்...
வலியின் அடையாளங்கள் காட்டும்
கண் வளைய கருமையும்
கன்னத்தில் முளைத்த புற்களும்..
கரைந்து கொண்டிருக்கிறது
ஓர் நிலா...
தனிமை தீவி்ல்
தனக்கு தானே..

No comments:
Post a Comment