Thursday, July 28, 2011

நெஞ்சு பொறுக்கவில்லையே



ஈழத்தில் எம் தமிழர்
உயிர் காக்கைக்கும் கழுகுக்கும்
மூவேளை உணவானதே..
கொத்துக் குண்டுகள் வீசி
கொத்து கொத்தாய்
என் இனம் மடிந்ததே..
பச்சிளம் குழந்தைகளின் உயிர்கள்
ஈனர்களின் இனவெறிக்கு இரையானதே..
கண்ணகிகள் பலநூறின் கற்பு
காமக் கயவர்களால் பறிபோனதே..
கர்ப்பிணிகள் சிலநூறின் கருவறை
சிசுக்களும் சிதைந்து போனதே....
கயவர் கூட்டம் கைகூடி நிற்க
கண்மூடியே உலகமும் நின்றதே..
கத்திய குரல்களெல்லாம் செவிட்டு
காதினில் ஒளிக்காமல் போனதே..
காணொளி பல இன்று கண்டுலகம்
கண்ணீர் விட்டு புலம்புகிறதே..
நெஞ்சு பொறுக்கவில்லையே
நிலை கெட்ட மாந்தர்களே..
எம்மினம் கருவறுக்க கைகோர்த்த
உங்கள் பெண்மைத் தனமெண்ணி..
தமிழனின் கண்ணீருக்கு நீ
பதில் சொல்லும் காலம் வரும்...
அன்று ஈழம் மலரும்
எங்கள் இதயம் குளிரும்....

No comments:

Post a Comment