Thursday, July 28, 2011

கோடி அழகு



வர்ணம் கலையாத
இயற்கையின் அழகு...
அதில் வானமென்னும்
அழகிய போர்வை
பூமிப் பந்தை போர்த்திடும்...
வான வீதியில் யாரிவள்
அழகு குலுங்கிட
நடக்கும் மங்கை..
இருள் நேரத்திலே
யாருக்கும் அஞ்சாமல்...
பாரதியின் புதுமை பெண்ணாம்
நிலவென்பது அதன் பெயராம்..
அடி அழகு பெண்ணே
கவனமாக போக..
நீ போகும் பாதையெங்கும்
நடசத்திர ரவுடிகள்..
உன்னை பின்தொடர்ந்து
பொய் காதல் வசனம்
பேசி வருவார்கள்...
பூலோகத்து பெண்கள்
வைக்கும் கண் மையாய்
இருள் படலம்...
வாழ்க்கை பாடம் போதிக்கும்
இயற்கை அழகு...
இருளையும் கட வெளிச்சம்
பெறுவாய் என போதித்து...
விடியல் பிறந்தது
அடிவானத்தில் வெளிச்ச
கீற்று வாவா என அழைத்தது..
சூரிய கீற்று உலகின்
முதல் வள்ளல்
உலகத்து மெழுகு திரி...
பெண்ணின் கார்கூந்தலை
போல வானம் வருடும்
மேக கூட்டங்கள்...
இயற்கை வரைந்த
தூரிகை ஓவியங்கள்...
என்ன மகிழ்வோ மேகம்
இசை மீட்டுகிறது
இடியாய்...
அடடே என்னதொரு அழகிய
கையெழுத்து வானத்திலே
மின்னல் என்று பெயரெழுதி...
இவன் வயது முதிர்ந்த
பாட்டிக்கு முத்தமிட்டால்
முக சுருக்கம் மறைந்து
குமரி ஆகிறாள்..
இவளும் முத்தமிட்டாள்
வறண்ட நிலங்கள் எல்லாம்
பசுமையானது..
குமரியும் கை தொழுது
மகிழ்ந்தாள் மழை தேவனே
முத்தத்தை தொடர்ந்த தாவென..
மழலை கூட்டங்களின்
இசை கச்சேரியாய்
வண்ண மலர்கள்
மனம் மகிழ நின்றேன்...
அக்கணம் உடலை தவழும்
தேவதை பெண்ணாய்
தென்றலெனும் மாய அழகு..
மலைகள் மலைக்க வைக்கும்
அழகின் அற்புதம்...
அதிலோ இயற்கை புடவை
காய்த்து போட்டிருக்கிறது
புடவையின் பெயரோ நீர்வீழ்ச்சியாம்..
யார் நடந்து வர
கட்டப்பட்ட பாலம் இது
கிழக்குக்கும் மேற்குக்கும்
வானவில் என்ற பெயர் சூட்டி...
கொட்டிக் கிடக்கும் ஆயிரம்
இயற்கை அழகில் கொள்ளை
போனது என்னிதயம்...
சொன்னது கொஞ்சம்
சொல்லாதது வானளவு மிஞ்சும்...
இயற்கையில் கொட்டி கிடக்குது
இணையில்லா கோடி அழகு...
இதை அழிப்பதால் வருமே
மனித இனத்திற்கு அழிவு...
மனித இனமே மறந்து போகாதே
செயற்கையில் தொலைந்து போகாதே..

No comments:

Post a Comment