Thursday, October 6, 2011

அச்சுப்பிழை....

பெற்றோர்களின் கவனக்
குறைவால் அச்சுப்பிழையாய்
வெளிவந்த அழகிய கவிதைகள்...

பிறந்து ஆண்டுகள் ஆயினும்
கைக்குழந்தையாகவே காலம்
கழிக்கும் வண்ண மலர்கள்...

கள்ளம் இல்லா
வெள்ளை சிரிப்பில் கட்டிவைத்து
கண்களில் நீர்வரவைத்தார்கள்..

ஓடியாடி மகிழ்ந்து
களிக்கும் குழந்தைகளை பார்த்து
கைதட்டி களிக்கின்றனர்...

ஓடி விளையாடு பாப்பா
என்று உரக்க பாடுகிறார்கள்
இந்த போலியோ குழந்தைகள்...

No comments:

Post a Comment