Thursday, October 6, 2011

பசித்தீ..

அகன்ற மரத்தில் தொங்கியிருக்கும்
தூக்கனாங்குருவி கூடு..
தொலைவில் கேட்கும் இனிய
குயிலோசை..
மரக்கிளையில் ஒளிந்திருக்கும்
கிளியின் கானம்..
அடிவானத்தில் தெரியும் அழகிய
வானவில்..
சொட்டு சொட்டாய்
தலைமேல் விழும் மழைத்துளி..
மெல்ல வருடும்
சோலைவனத் தென்றல்..
கள்ளம் இல்லாத
மழலையின் சிரிப்பொலி..
கொள்ளை அழகை போர்த்தியபடி
உலா வரும் நிலா..
அத்தனையும் ரசிப்பதை
மறக்க செய்யும்..
அடி வயிற்றில்
பற்றியெரியும் பசித்தீ..

No comments:

Post a Comment