நினைவுகள்....
கீரிக் கொண்டிருக்கும்
நிமிஷ நகங்கள்...
எரிச்சல் விரட்டும்
விசிறி்யாய் உன் நினைவுகள்...
நினைவெனும் காளான் குடையடியில்
சிற்றெரும்பாய் நான்...
கண்ணீர் மழையினூடே நான்
ஒதுங்க இடம் தந்து...
நினைவெனும் தெருநாய்கள்
என்னை துரத்துகின்றன...
தானாய் வலிய அதனிடம்
கடிபட ஆனந்தபடுகிறேன். .
No comments:
Post a Comment