Sunday, July 31, 2011

உண்மை பொருள்



போவோமா ஒரு திருமண
மண்டபத்திற்கு...
உண்மை பொருள்
உணர்ந்திட...
உயிருடன் நடக்கும் கரும்பு
சக்கை அதோ
அவரே பெண்ணிண் தந்தை...
அதோ மடியில் கட்டப்பட்ட
நெருப்பை அவிழ்த்து விட்டதாய்
கனவு காணும் தாயார்...
உடற்பசிக்கும் பணப்பசிக்கும்
இலவசமாய் பெண் கிடைத்த
மகிழ்ச்சியில் அதோ மணமகன்...
கடைசி பருக்கை வரை
பெண்ணின் வீட்டில் சுரண்டிய
தெம்பில் மணமகனின் தந்தை...
வீட்டோடு இலவச வேலைக்காரி
கிடைத்த மகிழ்ச்சி களிப்பில்
அதோ மணமகனின் தாய்...
வரதட்சணை வில்லேந்தி வந்த
ராமனையே கைப்பிடித்தாள் சீதையென்பதை
மறந்து வாழ்த்தும் கூட்டம்..
கடைசியாய் அவளும் சிரிக்கிறாள்
சி்ரிக்கட்டும் திருமண புகைப்படத்திற்காக...

No comments:

Post a Comment