அர்த்தம் இழந்தவை பார்த்து
ஆறுதல் கேட்கும் உள்ளம்..
கசப்பையும் தின்ன வேண்டும்
கால ஓட்டத்தில்...
வலிகள் தரும் போதனை
இது தான் வாழ்க்கையென...
தொடர்கதை என நினைத்தது
சிறுகதையாக மாறிவிடும்...
யோசித்தால் புரியும் முடிவுரைக்காக
எழுதப்பட்ட முன்னுரை அதுவென...
மெல்ல உதிரும் சிரிப்பு
கேலி பேசும் நிஜம்...
நடிக்கக் கூட தெரியவில்லை
ஏனிந்த போலி சிரிப்பென...
யதார்த்தம் சுட்டாலும்
இருட்டில் தேடிப் பார்க்கிறேன்..
கைகளால் துழாவி
ஏதாகிலும் கிடைக்குமென...
வியர்க்க களைத்து திரும்புகையில்
தான் மெல்ல உணர்ந்தேன்..
தேடல் படலத்தில் என்னில்
இருந்த சில தொலைந்ததை...
காலத்தின் சூரிய பசிக்கு
கரைந்து ஓடும் பனிக்கட்டி...
சில நிஜங்கள் உருண்டு
ஓடுகிறது கால ஓட்டத்தில்...
அர்த்தம் இழந்தைவைகளை பார்க்கிறேன்
அவை வேறெங்கோ பார்க்கின்றன...
ஆறுதல் கேட்கும் உள்ளம்..
கசப்பையும் தின்ன வேண்டும்
கால ஓட்டத்தில்...
வலிகள் தரும் போதனை
இது தான் வாழ்க்கையென...
தொடர்கதை என நினைத்தது
சிறுகதையாக மாறிவிடும்...
யோசித்தால் புரியும் முடிவுரைக்காக
எழுதப்பட்ட முன்னுரை அதுவென...
மெல்ல உதிரும் சிரிப்பு
கேலி பேசும் நிஜம்...
நடிக்கக் கூட தெரியவில்லை
ஏனிந்த போலி சிரிப்பென...
யதார்த்தம் சுட்டாலும்
இருட்டில் தேடிப் பார்க்கிறேன்..
கைகளால் துழாவி
ஏதாகிலும் கிடைக்குமென...
வியர்க்க களைத்து திரும்புகையில்
தான் மெல்ல உணர்ந்தேன்..
தேடல் படலத்தில் என்னில்
இருந்த சில தொலைந்ததை...
காலத்தின் சூரிய பசிக்கு
கரைந்து ஓடும் பனிக்கட்டி...
சில நிஜங்கள் உருண்டு
ஓடுகிறது கால ஓட்டத்தில்...
அர்த்தம் இழந்தைவைகளை பார்க்கிறேன்
அவை வேறெங்கோ பார்க்கின்றன...

No comments:
Post a Comment