Thursday, July 21, 2011

அழைப்பு



அன்புடன் அழைக்கிறது
என்னை வா வா என்று..
தனியாக போகவா
துணைக்கு ஒருவரை
அழைக்க நினைத்தேன்...
உறவுகளை கூப்பிட்டேன்
சிலர் மாயமானார்கள்
சிலர் உதறிப் போனார்கள்...
தோள் கொடுத்த தோழமைகளை
கூப்பிட்டேன்...
காதில் விழவில்லை
நாங்கள் செவிடர்கள் என்றார்கள்...
சிந்தாந்தம் முளைத்தது
யாரானாலும் அழைப்பை
ஏற்றுத்தானே ஆக வேண்டும்...
உண்மையை உரைத்தேன்
யாரும் அழைப்பை
ஏற்க தயாரில்லை...
மரணமே எப்படியும் எல்லோரையும்
அழைக்கப் போகிறாய்..
நான் அழைப்பை ஏற்கிறேன்
விரும்பியே...
மற்றவர்களும் ஏற்பார்கள்
அவர்களுக்கான அழைப்பு
வருகையில்.
..

No comments:

Post a Comment