Wednesday, August 31, 2011

தன்னலம்...

வீட்டு வாசலில் 
சோறு வைத்தேன்..
கூடி வாழ்ந்தால்
கோடி நன்மை என்பதன்
ஊதாரணங்களாம் 
காக்கை கூட்டத்திற்கு..
ஒர் காகம் வந்தது...
அது கரையும் 
மற்ற காக்கைகளும்
வருமென நான் நினைத்து 
காத்திருக்கையில்
சுற்றும் முற்றும் பார்த்தது
அந்த காகம்...
பிறகு ஒரு பருக்கை
விடாமல் தின்றது...
மனி்தர்களை பார்த்து 
தன்னலம் கற்றதோ
அந்த காகமும் ....

No comments:

Post a Comment